என்ன செய்கிறது அறநிலையத்துறை? பக்தர்கள் கொதிப்பு | Venkatachalapathi Temple | HRCE
திருநெல்வேலி சாந்தி நகரில் திம்மராஜபுரம் வெங்கடாசலபதி கோயிலுக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலம் உள்ளது. அங்கே அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. இருந்தும் மாநகராட்சி குப்பைகளை கொட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி குப்பைகளை அள்ளும் ஒப்பந்த நிறுவனம் மக்கள் எதிர்ப்பையும் மீறி கோயில் நிலத்தில் குப்பைகளை கொட்டி வருகிறது. ஏற்கனவே இதே ஒப்பந்த நிறுவனம் திருநெல்வேலி பேட்டை ஸ்மார்ட் சிட்டி மார்க்கெட் பகுதியில் குப்பைகளை கொட்டி வந்தது. பொதுமக்கள் எதிர்ப்பால் அங்கிருந்து காலி செய்துவிட்டு கக்கன் நகர் பகுதியில் குப்பைகளை கொட்டினர். இப்போது வெங்கடாசலபதி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் குப்பைகளை கொட்டுவது மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. மேலும் சுற்றுப்புறத்திலுள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுகள் தேங்கும் மையமாக கோயில் இடம் மாறியுள்ளது. வீடு, ஓட்டல் மற்றும் இறைச்சி கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கொண்டு வந்து, சிலர் கொட்டி செல்கின்றனர். கோயில் நிலத்தை பாதுகாக்கும் வகையில் சுற்றியும் கம்பி வேலி அமைக்க வேண்டும்.