34 காரில் குண்டு! மும்பையை உலுக்கிய பகீர் | mumbai 34 car bomb | mumbai bomb threat | pak terrorists
மும்பை நகரில் சுற்றித்திரியும் 34 கார்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விநாயகர் சதுர்த்தியின் 10வது நாள் நிறைவை அனந்த் சதுர்தஷி பண்டிகையாக இந்துக்கள் கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதை சீர்குலைக்கும் வகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மும்பை சிட்டி போக்குவரத்து போலீஸ் டிபார்ட்மென்ட்டின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் நம்பருக்கு மிரட்டல் மெசேஜ் வந்தது. அதில் சதிகாரர்கள் கூறி இருந்தது: செப்டம்பர் 6 அனந்த் சதுர்தஷி நாளில் மும்பை நகர் முழுதும் வெடிகுண்டுகள் வெடிக்கும். 34 கார்களில் மனித வெடிகுண்டுகளை பொருத்தி இருக்கிறோம். குண்டு வெடித்ததும் மொத்த நகரமும் குலுங்கும். இதற்காக பாகிஸ்தானில் இருந்து 14 பயங்கரவாதிகள் இறங்கி இருக்கின்றனர். மொத்தம் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிக்கும். இதன் மூலம் ஒரு கோடி மக்களை கொன்று குவிக்க முடியும் என்று அந்த மெசேஜில் கூறி உள்ளனர். மெசேஜ் அனுப்பியவர்கள் தங்களை லஷ்கர் இ ஜிஹாதி பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தினர்.