/ தினமலர் டிவி
/ பொது
/ பயங்கரவாதிகளுக்கு தரமான சம்பவம் காத்திருக்கு | Terrorist attack | Kashmir | Encounter
பயங்கரவாதிகளுக்கு தரமான சம்பவம் காத்திருக்கு | Terrorist attack | Kashmir | Encounter
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் மீண்டும் தலை தூக்கி உள்ளது. சில வாரங்களாக தொடர் தாக்குதல் நடக்கிறது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டிவிடவும், தாக்குதல் நடத்தவும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 55 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். திங்கள் மாலையில் தோடா மாவட்டம் தேசா காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர்கள் 4 பேர் இறந்தனர். இந்த சம்பவத்துக்கு காஷ்மீர் டைகர்ஸ் எனப்படும் காஷ்மீர் புலிகள் அமைப்பு பொறுப்பேற்றது. இது பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஸ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஒரு அங்கம் ஆகும்.
ஜூலை 20, 2024