லெபனானில் இஸ்ரேல் வீரர்கள் ஆக்ரோஷ வேட்டை | Israeli Forces| Hezbollah Tunnel | Lebanon
ஹிஸ்புலாவுக்கு மரண அடி சுரங்கத்தை அழித்த இஸ்ரேல் இவ்ளோ பெரிய Tunnel ஆ? பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ம்தேதி காசாவை ஒட்டிய இஸ்ரேல் எல்லை பகுதிகளில் திடீர் தாக்குதல் நடத்தி, 200க்கு மேற்பட்டவர்களை கடத்திச் சென்றனர். போர் துவங்கி நாளையுடன் ஓராண்டு முடிகிறது. ஹமாசை ஒழித்துக் கட்டி காசா பிரச்னைக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இதுவரை காசாவில் 42 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக, காசா சுகாதார துறை கூறியுள்ளது. ஹமாஸ்க்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹெஸ்புலா அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராக சண்டையில் குதித்தது. இதைத் தொடர்ந்து, ஹமாசுடன் சண்டையிட்டுக் கொண்டே இன்னொருபுறம் லெபனானில் உள்ள ெஹஸ்புலா பதுங்கிடங்களையும் இஸ்ரேல் படைகள் தாக்கத் துவங்கின. இஸ்ரேலின் பதிலடியை தாங்க முடியாமல் ெஹஸ்புலா திணறி வருகிறது. தலைவன் ஹசன் நஸ்ரல்லா மற்றும் பல முக்கிய தளபதிகள் வரிசையாய் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டனர்.