தாமரை பிரதர்ஸ் மீடியா பி லிட். வெளியிட்ட புதிய புத்தகங்கள் thamarai brothers media | P Swaminathan
தாமரை பிரதர்ஸ் மீடியாவின் புதிய வெளியிடான, எழுத்தாளர் சுவாமிநாதன் எழுதிய, மகா பெரியவா-தொகுதி 2 மற்றும் சாதா மனிதனை சாதிக்க வைத்த அனுபவம் பேசுகிறது ஆகிய 2 நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. எழுத்தாளர் சுவாமிநாதன் -செல்லா தம்பதியின் சஷ்டியப்த பூர்த்தி விழா சென்னை மேடவாக்கம், ஸ்ரீதேவி பேலஸ் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி, அவரது 2 நூல்களும் வெளியிடப்பட்டன. மகா பெரியவா-தொகுதி 2, சாதா மனிதனை சாதிக்க வைத்த அனுபவம் பேசுகிறது ஆகிய 2 நூல்களையும் தினமலர் நாளிதழ் இணை இயக்குநரும், தாமரை பிரதர்ஸ் மீடியா இயக்குநருமான ஆர் லட்சுமிபதி வெளியிட்டார். நூல்களின் பிரதிகளை வானிலை ரமணன், பதிவுத்துறை DIG சுவாமிநாதன், கல்வியாளர் சுரேஷ் CA, எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான லட்சுமணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.