எம்ஜிஆர் முதல் விஜய் வரை சுவாரஸ்யங்கள் அடங்கிய நூல் thamarai brothers pvt ltd| book release
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் 48 வது புத்தக கண்காட்சி, சென்னை நந்தனம் ஒம்எம்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு 45 மற்றும் 46வது அரங்கில் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டின் புத்தக கண்காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் வெளியீடான, ஆர் நூருல்லா எழுதியுள்ள நடிகர்களின் அரசியல் அரிதாரம் நூல் வெளியீட்டு விழா, புத்தக கண்காட்சி அரங்கில் நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி டிஎன் வள்ளிநாயகம், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பிரைம் பவுண்டேஷன் குழு நிறுவனர் பிரைம் பாயின்ட் சீனிவாசன், நாவலாசிரியர் என்.சி மோகன் தாஸ், மணிமேகலை பிரசுரம் ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நடிகர்களின் அரசியல் அரிதாரம் புத்தகத்தை வெளியிட்டனர்.