உத்தரவுகளை கண்டுகொள்ளாமல் நெல்லை மாநகராட்சி அலட்சியம் | Thamirabarani River | Nellai Corporation
தாமிரபரணியில் கழிவு நீர்! மாநகராட்சி ₹1.55 கோடி இழப்பீடு வழங்க பரிந்துரை திருநெல்வேலி மாநகராட்சியையொட்டி தாமிரபரணி ஆற்றில் கருப்பந்துறை, சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், கைலாச புரம், சிந்துபூந்துறை, வண்ணாரப்பேட்டை என பல இடங்களில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. ஐகோர்ட் நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் ஆய்வு செய்து உத்தரவிட்ட பிறகும் கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படவில்லை. கழிவுநீர் கலக்கும் மாநகராட்சி நிர்வாகம் மாதம்தோறும் 5 லட்சம் வீதம் அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது. 2023 ஜனவரி முதல் 2025 ஜூலை வரை 31 மாதங்களுக்கு 1.55 கோடி இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய இன்ஜினியர் கிருஷ்ணபாபு, சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமைக்கு இது குறித்து பரிந்துரைத்துள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பிய சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் கூறுகையில், சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பரிந்துரையை திருநெல்வேலி மாநகராட்சிக்கு நோட்டீஸ் ஆக அனுப்பி உள்ளனர். ஆனாலும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த உத்தரவுகளை கண்டுகொள்வதில்லை என கூறுகிறார்.