உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசுக்கு தண்ணி காட்டிய கேங் லீடர் சிக்கியது எப்படி? | Theft | Deputy Commissioner North

போலீசுக்கு தண்ணி காட்டிய கேங் லீடர் சிக்கியது எப்படி? | Theft | Deputy Commissioner North

வீடுகளில் கொள்ளையடித்து மில் அதிபர் ஆன Rod man கோவையில் வீடுகளில் நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். 3 மாத தேடுதல் வேட்டையில் அந்த கொள்ளை கும்பலின் தலைவன் மூர்த்தி கூட்டாளி அம்சராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் மட்டும் 18 கொள்ளை வழக்குகளிலும், தமிழகம் முழுவதும் 68 க்கு மேற்பட்ட வழக்குகளில் இவர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. நகைகள், கார், பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கேங் லீடர் மூர்த்தியும் அவர் கூட்டளிகள் 7 பேரும் தேனியை சேர்ந்தவர்கள். வீடுகளின் பூட்டை உடைப்பதற்காக கையில் எப்போதும் இரும்பு கம்பியை களம் இறங்குவதால் மூர்த்தியை Rod man என்ற போலீசார் குறிப்பிடுகின்றனர்.

ஜூலை 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ