தேனியில் கடத்தப்பட்ட வக்கீலுக்கு என்ன நடந்தது? | Police | Theni
தேனி மாவட்டம் போடி அருகே சுப்புராஜ் நகரை சேர்ந்தவர் வக்கீல் சுரேஷ். இருவருக்கும் சந்தன பாண்டி என்பவருக்கும் இடையே நிலம் விற்பது தொடர்பாக விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் காலையில் வாக்கிங் சென்ற வக்கீல் சுரேஷை நான்கு நபர்கள் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். அப்போது கூச்சல் சத்தம் கேட்டதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தேனி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியகுளம் செல்லும் ரோட்டில் கார் செல்வதாக தகவல் கிடைத்தது. போடி இன்ஸ்பெக்டர் கேத்ரின் மேரி அவர்களை துரத்தி சென்று காரை வழிமறித்து வக்கீல் சுரேஷை மீட்டார். கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அட்டாக் பாண்டி, செல்வேந்திரன், சிவனேசன், சண்முகம் என தெரியவந்தது. வக்கீலை கடத்தியது குறித்து நான்கு பேரிடமும் விசாரணை நடக்கிறது. கடத்தப்பட்ட இரண்டே மணி நேரத்தில் அவரை மீட்ட இன்ஸ்பெக்டர் கேத்ரினுக்கு போலீஸ் உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். ஏற்கனவே ஓசூரில் வக்கீல் ஒருவர் கோர்ட் முன் வைத்து வெட்டப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.