கும்பகோணம் பெருமாள் கோயில் சிலைகள் கண்டுபிடிப்பு | Thirumangai Alwar idol | Kumbakonam Perumal
திருமங்கை ஆழ்வார் சிலையை திருப்பி அனுப்புகிறது லண்டன்! 1957ல் மாயமான சிலை கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் 1957ல் இருந்து 1967க்குள் 4 விலைமதிப்பில்லாத சிலைகள் திருடு போனதாக புகார் எழுந்தது. சம்பவம் குறித்து 2020ல் சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் வழக்கு பதிந்தனர். விசாரணை அதிகாரியாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலைகள் தான் அவை என முதல் கட்டமாக தெரிந்தது. தொடர் விசாரணையில் வெளிநாட்டை சேர்ந்த கடத்தல் கும்பலால் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு விற்கப்பட்டதும் தெரிந்தது. புலன் விசாரணையில் இப்போது கோயிலில் உள்ள 4 சிலைகளும் போலி என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. சிலை திருட்டு தடுப்பு தனிப்படையினர் தொடர் விசாரணை நடத்தினர். திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் உள்ள அஸ்மோலியன் மியூசியத்திலும் மற்ற சிலைகள் அமெரிக்காவின் சில மியூசியங்களில் இருப்பதையும் கண்டுபிடித்தனர். திருமங்கை ஆழ்வார் சிலை அஸ்மோலியன் மியூசியத்தால் 1967ல் வாங்கப்பட்டு உள்ளது. சிலை நம்முடையது என்பதற்கான முக்கிய ஆதாரங்களை திரட்டி சம்பந்தப்பட்ட மியூசியங்களுக்கு அனுப்பி வைத்தனர்.