திமுக கூட்டணியை பதம் பார்க்கும் விஜய் என்ட்ரி | DMK | VCK | Thirumavalavan
சென்னையில் அம்பேத்கர் தொடர்புடைய புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 6ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனும், தவெக தலைவர் நடிகர் விஜயும் பங்கேற்பார்கள் என்ற தகவல் பரவியது. திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வந்திருக்கும் விஜயோடு எப்படி பங்கேற்பார் என்கிற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் திமுக கூட்டணியில் தான் தொடருகிறோம் என திருச்சியில் அடித்து கூறியிருக்கிறார் திருமாவளவன். ஆனால் டிசம்பர் 6ல் நடக்கும் நிகழ்ச்சி குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். திமுக கூட்டணியை விட்டு வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. விசிக மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். இதனால் விசிக மீதான நம்பகத்தன்மை குறைகிறது. எங்களுக்கு எப்போதும் ஊசலாட்டம் இருந்ததில்லை. வரும் 2026 தேர்தலில் திமுக கூட்டணியில் தான் விசிக இடம்பெறும். இதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில இனி யாரும் என்னிடம் கேள்விகள் கேட்க கூடாது. அம்பேத்கர் தொடர்புடைய புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஸ்டாலின், ராகுலை அழைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொன்னார்கள். புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என என்னிடமும் கட்டுரை கேட்டிருந்தனர். 40 தலைவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. ஏப்ரல் 14ல் நடக்க வேண்டிய வெளியீட்டு விழா தள்ளிப்போனது. அதன்பின் நடிகர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.