உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 11 பேருக்கு தண்டனை அறிவித்த நெல்லை கோர்ட் | Udappankulam | Judgement | Thirunelveli Special Court

11 பேருக்கு தண்டனை அறிவித்த நெல்லை கோர்ட் | Udappankulam | Judgement | Thirunelveli Special Court

4 பேருக்கு தூக்கு தண்டனை தென்காசி சம்பவத்தில் ஷாக் 2014ல் என்ன நடந்தது? தென்காசி சங்கரன்கோவில் அருகே உடப்பன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன்கள் காளிராஜ், முருகன், இவர்களுடைய உறவினர் வேணுகோபால். கடந்த 2014ல் மூன்று பேரும் பைக்கில் சென்ற போது வெட்டி கொல்லப்பட்டனர். திருவேங்கடம் போலீசார் நடத்திய விசாரணையில் சாதிய மோதல் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது. உடப்பன்குளத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் கொடுத்த புகாரில் இன்னொரு பிரிவினர் மீது தீண்டாமை வழக்கு பதியப்பட்டது. இதனால் அவர்களை பழிவாங்க 3 பேரையும் வெட்டி கொன்றது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இது குறித்த வழக்கு நெல்லை கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். நெல்லை கோர்ட்டில் இன்று நடந்த இறுதி விசாரணையில் குற்றவாளிகளான பொன்னுமணி, குருசாமி, முத்துகிருஷ்ணன், காளிராஜ் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை