உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பரங்குன்றம் தீபத்தூண் அருகே நிசப்தம் - ஏற்பாடுகள் என்னாச்சு? | Thiruparankundram |

திருப்பரங்குன்றம் தீபத்தூண் அருகே நிசப்தம் - ஏற்பாடுகள் என்னாச்சு? | Thiruparankundram |

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறு சீராய்வு மனு செய்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்படுமா, தீப தூணில் தீபம் ஏற்றுவதை இந்த ஆண்டு தரிசிக்க முடியுமா என பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மலை மேல் வழக்கமாக கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள மண்டபத்தில், மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படும். பாதுகாப்பு கருதி மலை உச்சியில் உள்ள தீபத்தூணை சுற்றிலும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டு துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த ஆண்டு தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருந்தும் நேற்று இரவு வரை தீப மண்டபத்தை சுற்றி மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. தீபத்தூணை சுற்றிலும் மூங்கில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இது குறித்து திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் கூறியதாவது, கோர்ட் தீர்ப்பின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின்பு தீபத்தை நாங்கள் தரிசிக்க உள்ளோம். இதன்மூலம் வாழ்நாள் பயன் அடைந்துள்ளோம். இழந்த பெருமையை மீட்டுள்ளோம். நூற்றாண்டுகள் கனவு நிறைவேற போகிறது என நம்புகிறோம். இனிமேல் யாரும் சர்வே கல் என கூறாதீர்கள்; முருகனின் சாபம் பலித்து விடும். கடந்தாண்டு தி.மு.க., அரசு செய்த தடைகள், குறுக்கு வழிகளை த.வெ.க., அரசு கடைபிடிக்க கூடாது. ஹிந்துக்கள், பக்தர்கள், உள்ளூர் மக்களின் ஆன்மிக உணர்வுகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு தி.மு.க., அரசு தடை விதித்ததுடன், பொதுமக்களை மிகுந்த இன்னல்களுக்கு ஆளாக்கினர். இருபதுக்கு மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஐந்து நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. தெருக்களில் தடுப்புகள் வைத்து மறித்தனர்.பள்ளிகளுக்குகூட குழந்தைகள் செல்ல முடியவில்லை. பால் வாங்குவதற்கு கடைக்கு கூட செல்ல முடியாமல் போலீசார் தடை விதித்தனர். சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை மதித்து, இந்த ஆண்டாவது தீபம் ஏற்றுவார்களா? கடந்த ஆண்டுகளைப் போலவே தீபம் ஏற்றுவதற்கு தடை விதிப்பார்களா என இப்போதே பயம் தொற்றிக் கொண்டுள்ளது என்றனர். #Thiruparankundram #KarthigaiDeepam #Deepathoonam #SupremeCourtVerdict #MaduraiDistrictAdministration #TamilNaduNews #LordMurugan #TempleRights #SecurityArrangements #CurrentAffairs #NewsUpdates #India #TNPolitics

நவ 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை