உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசாரின் முடிவு சரி! அழுத்தமாக சொன்ன கோர்ட் | Thiruparankundram | HighCourt | Madurai

போலீசாரின் முடிவு சரி! அழுத்தமாக சொன்ன கோர்ட் | Thiruparankundram | HighCourt | Madurai

சிக்கந்தர் தர்கா பேரணி கோர்ட் அனுமதி மறுப்பு திருப்பரங்குன்றம் மலையில் முருகன், காசி விஸ்வநாதர் கோயிலும் சிக்கந்தர் தர்காவும் உள்ளது. கோயில் அருகே உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட முயற்சிப்பதாக இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மதுரையில் பிப்ரவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்த திரண்ட இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் நடந்த வழக்கில் மதுரை பழங்காநத்தத்தில் ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்த பொதுநல வழக்குகளை ஐகோர்ட் மதுரை கிளை நேற்று தள்ளுபடி செய்தது. இந்த சூழலில் ஜமாத்தை சேர்ந்த சையது ராஜா ஐகோர்ட் மதுரை கிளையில் ஒரு மனு செய்து இருந்தார். சிக்கந்தர் தர்கா வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி சன்னதி தெருவில் இருந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என அதில் கூறி இருந்தார். மனு நீதிபதி தனபால் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியாக இந்த ஆர்பாட்டத்தையும், பேரணியையும் நடத்துவோம் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. போராட்டம், ஆர்ப்பாட்டம் என இந்த விவகாரத்தில் இதுவரை 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. மத மோதல் தொடர்பான போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் இப்போது தான் அமைதியான முறையில் வழிபாடு செய்து வருகின்றனர் என அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி, சட்டம் ஒழுங்கை கெடுக்கும் எந்த ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டதுக்கும் அனுமதி வழங்க முடியாது என உத்தரவிட்டார். சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டும், மக்கள் நலன் கருதியும் போலீசார் அனுமதி மறுத்தது சரியே என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தார்.

பிப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ