லட்டு தயாரிப்பு பற்றி விளக்கம் சொன்ன தேவஸ்தானம்! Thirupathi Laddu | Devasthanam | Christian Contract
திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிப்பு குறித்து பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. லட்டு தயாரிக்கும் சமையலறையில் தற்போது 980 இந்துக்கள் பணிபுரிகின்றனர். பழங்காலம் முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை அவர்கள் செய்து வருகின்றனர். வைஷ்ணவ பிராமணர்கள் மட்டுமே லட்டு தயாரிப்பதற்கு பயன்படும் மூல பொருள்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மட்டுமே லட்டு தயாரிக்கின்றனர். மற்றவர்கள் லட்டுகளின் போக்குவரத்து, சேமிப்பு, சமையல் அறை சுத்தம் செய்தல் மற்றும் லட்டு கவுண்டர்களில் உள்ள பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் தாமஸ் என்பவருக்கு லட்டு தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டு அவரது உத்தரவுகளின்படி திருப்பதி லட்டு தயாரிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் பொய்யானவை. இது முற்றிலும் ஆதாரமற்ற தவறான செய்தி. பொய்ப் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம். தவறான பிரச்சாரம் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.