சிக்கி திணறும் வாகனங்கள் சிப்காட்டில் உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகம் உள்ளது. இங்கு 46 தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு கன்டெய்னர் லாரிகள், கனரக லாரிகள் என தினமும் சராசரியாக 350 வாகனங்கள் வந்து செல்கின்றன. இது தவிர நூற்றுக்கணக்கான கார், வேன், பஸ்களில் தொழிலாளர்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக சிப்காட்டுக்கு வரும் வாகனங்கள், பெரியபாளையத்தில் 3 சாலை சந்திப்புகள், ஆரணி ஆற்றி பாலம், பவானி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.
ஜூலை 14, 2024