தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நடந்த சம்பவம் | Indian Coast Guard | NCIB
தூத்துக்குடி - மாலத்தீவு இடையே சிறிய ரக கப்பல் மூலம் கட்டுமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து மாலத்தீவு புறப்பட்டு சென்ற ஒரு கப்பலில் போதை பொருள் கடத்தி செல்லப்படுவதாக தகவல் வந்தது. மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்திய கடலோர காவல் படை உதவியை நாடினர். கடலோர காவல்படை உதவியுடன் கப்பலை நடுக்கடலில் வழி மறித்த அதிகாரிகள், தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கப்பலை கொண்டு வந்தனர். பின்னர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
மார் 08, 2025