உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மும்மொழி பாட திட்டத்தை எதிர்த்த வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மும்மொழி பாட திட்டத்தை எதிர்த்த வழக்கு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

நாடு முழுதும் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மூன்று மொழிகள் கற்பது கட்டாயம் என சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பாடத்திட்டத்தின் படி இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு மொழியை கற்க விரும்புவோர் அதை மூன்றாவது மொழியாக கற்கலாம். மூன்றாவது மொழிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படாத எனவும் அறிவிக்கப்பட்டது. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏற்கனவே, மும்மொழி கொள்கையை எதிர்த்து வரும் நிலையில், வரும் கல்வி ஆண்டு முதலே அதை கட்டாயப்படுத்தும் நடவடிக்கைக்கு கண்டனங்கள் எழுந்தன. #ThreeLanguagePolicy #SupremeCourt #CBSE #NCERT #TripleLanguage #9thStanderd #SchoolEducation #CBSESchool

மே 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை