ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அரசியல் நிலைப்பாடு tirumavalavan| tvk| vck| vijay| dmk alliance
விசிக தலைவர் திருமாவளனின் அறிக்கை: திமுக கூட்டணியை சிதறடிக்க திட்டமிடுவோர் விசிகவை ஒரு கருவியாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். 2019 பார்லிமென்ட் தேர்தலில் இருந்தே இந்த முயற்சிகள் தொடர்கிறது. திமுக, - விசிக உட்பட 10க்கு மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைத்து உருவானது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. 2019,2021,2024 பொதுத்தேர்தல்கள் உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றிகளை இக்கூட்டணி குவித்து வருகிறது. இதனை கொள்கை பகைவர்கள், அரசியல் போட்டியாளர்களால் எப்படி சகித்து கொள்ள முடியும். 2026ல் இக்கூட்டணி ஜெயிப்பதை எப்படி அனுமதிப்பர். எப்படியாவது கூட்டணியை சிதறடித்து, வெற்றியை தடுக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம். குறிப்பாக திமுக - விசிக இடையே உரசலை உருவாக்க தீவிரம் காட்டுகின்றனர். அதிமுகவும் மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம் என கூறியதையும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற விசிகவின் கால் நூற்றாண்டு கோரிக்கை முழக்கத்தையும் ஒரு கருவியாக கையில் எடுத்தனர். இப்போது தவெக தலைவர் விஜய் உடன் விசிக கூட்டணி அமைக்க போகிறது என்ற தோற்றத்தை உருவாக்க முனைகின்றனர்.