ரோட்டில் அமர்ந்து மறியல் செய்த விசிகவினர் | tirumavalavan | vck | Madurai
மதுரையின் புதூரில் விசிகவின் அரசியல் அங்கீகார வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி நடந்தது. அக்கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். முன்னதாக, புதூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், 62 அடி உயர கட்சி கொடி கம்பத்தை நட்டு வைத்தனர். நிகழ்ச்சிக்கு வரும் திருமாவளவன் கட்சி கொடி ஏற்றவும் ஏற்பாடு செய்தனர். ஆனால், அனுமதி இல்லாமல் கொடி கம்பம் வைத்ததாக வந்த புகாரையடுத்து, இரவோடு இரவாக போலீசார் அந்த கம்பத்தை அலேக்காக தூக்கி சென்றனர். அப்போது போலீசாரிடம் விசிகவினர் வாக்குவாதம் செய்ததால் பிரச்னை ஆனது. இதனால், நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
செப் 14, 2024