நெல்லையில் பரபரப்பை கிளப்பிய இரட்டை சம்பவம்! | tirunelveli | tirunelveli Police
நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர் வயது 55. இவரது மனைவி செல்வராணி, 53. இவர்களது மகள் ஜெனிபர் வயது 30. ஜெனிபர் அதே தெருவை சேர்ந்த மரிய குமார், 36 என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தார். மரிய குமாருக்கும் ஜெனிபருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. தனியாகப் பிரிந்து வந்த ஜெனிபர் பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த சூழலில் ஜெனிபருக்கு வட மாநிலத்தை சேர்ந்த ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தொடர்பை அறிந்த மரிய குமார் கண்டித்தார். நேற்று இரவு 10 மணியளவில் ஜெனிபர் வீட்டுக்கு வந்த மரிய குமார் ஜெனிபரை ஏன் கண்டிக்கவில்லை என பாஸ்கர், செல்வராணியிடம் வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பினார். தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மரியகுமாரை கைது செய்து பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.