/ தினமலர் டிவி
/ பொது
/ முன்விரோதத்தில் வாலிபர் கொலை; உடன் வந்தவருக்கும் வெட்டு | Nellai | Crime | Tirunelveli
முன்விரோதத்தில் வாலிபர் கொலை; உடன் வந்தவருக்கும் வெட்டு | Nellai | Crime | Tirunelveli
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருண்செல்வம், வயது 29. நண்பர் ஜலீல் உடன் நேற்று இரவு பைக்கில் திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் உள்ள டாஸ்மாக்கிற்கு சென்றார். அங்கு சென்று திரும்புகையில் பைக்கில் வந்த 2 பேர் வழிமறித்து அரிவாளால் தாக்கி உள்ளனர். உயிரை காப்பாற்றி கொள்ள இருவரும் அங்கிருந்து ஓடி உள்ளனர். விரட்டி சென்று பெட்ரோல் பங்க் அருகே அருண்செல்வத்தை சரமாரியாக வெட்டி விட்டு 2 பேரும் தப்பி ஓடினர்.
அக் 17, 2025