/ தினமலர் டிவி
/ பொது
/ நாயுடன் வந்து பெண் புகார்: உத்தரவு போட்ட கலெக்டர் tirupathur Collector Office Public Grievance Day
நாயுடன் வந்து பெண் புகார்: உத்தரவு போட்ட கலெக்டர் tirupathur Collector Office Public Grievance Day
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை வகித்தார். திருப்பத்தூர் அடுத்த புத்தகரம் பகுதியை சேர்ந்த தேவன் மனைவி பாப்பாவும் அவர் உறவினரும் நாயை கூட்டி வந்தனர். எதற்காக நாயை கூட்டி வந்தீர்கள் என கலெக்டர் கேட்டார். அவரிடம் மூதாட்டி கூறியதாவது: என் கணவர் இறந்து விட்டார். பிள்ளைகள் இல்லை. வீட்டில் தனியாக வசிப்பதால் பாதுகாப்புக்காக நாயை வளர்த்து வருகிறேன். எங்கு போனாலும் அது கூட வரும்.
டிச 23, 2024