/ தினமலர் டிவி
/ பொது
/ அம்மா, அப்பான்னு கூட பார்க்கல: பைக் வெறியனின் பகீர் செயல் | Tirupathur mother | Tirupathur crime
அம்மா, அப்பான்னு கூட பார்க்கல: பைக் வெறியனின் பகீர் செயல் | Tirupathur mother | Tirupathur crime
திருப்பத்துார் கசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆதிமூலம், வயது 64. டெய்லர். இவரது மனைவி வெங்கடேஸ்வரி, வயது 54. மகன் வெற்றி செல்வன், மகள் கோமதி. வெற்றி செல்வன் சிஏ முடித்து சென்னையில் ஆடிட்டரிடம் அசிஸ்டெண்ட்டாக உள்ளார். ஆதிமூலத்துக்கு சென்னையிலும் வீடு உள்ளது. அதனை விற்று பணம் தர வேண்டும் என வெற்றி செல்வன் நச்சரித்து வந்துள்ளார். இல்லையென்றால் விலை உயர்ந்த பைக் வாங்கி தர வேண்டும் என கேட்டுள்ளார். மகனின் நச்சரிப்புக்கு பிடி கொடுக்காத ஆதிமூலம் அவரை சமாளித்து வந்தார். இதனால் தந்தை, மகன் இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கமாம்.
செப் 16, 2025