/ தினமலர் டிவி
/ பொது
/ ஏழுமலையானுக்கு கடந்த ஆண்டு காணிக்கை எவ்வளவு? | Tirupati | Venkateswara Temple | Tirupati Revenue
ஏழுமலையானுக்கு கடந்த ஆண்டு காணிக்கை எவ்வளவு? | Tirupati | Venkateswara Temple | Tirupati Revenue
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024ம் ஆண்டில் 2.55 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 99 லட்சம் பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். கோவிட் முன்பு தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்து வந்தனர். மூன்று ஆண்டுகளாக தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக குறைந்துள்ளது. அதே நேரம் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை 3 ஆண்டுகளாக 1,200 கோடியை தாண்டுகிறது. தினசரி 3 கோடியை தாண்டி பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துகின்றனர்.
ஜன 02, 2025