திருப்பதி லட்டு விவகாரம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி Tirupati Laddu Case| Supreme Court on TTD|
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலந்திருந்ததாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். முந்தைய ஆட்சியில் வாங்கப்பட்ட நெய் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை செய்ததில், அதில் விலங்கு கொழுப்பு கலந்தது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். இது நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்துக்களின் உணர்வை புண்படுத்திவிட்டார் என முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜ தலைவர்கள் மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. இது குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு அறிவித்தார். திருப்பதி லட்டு தயாரிக்க கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக கூறி, சந்திரபாபு நாயுடு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக, பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் சிலர் பொது நல மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் அமர்வு இன்று விசாரித்தது.