உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உண்டியலில் மொபைல் தவற விட்ட பக்தர் ஏமாற்றம்! Tiruporur Kandaswami Temple| Mobile phone at Kandasawa

உண்டியலில் மொபைல் தவற விட்ட பக்தர் ஏமாற்றம்! Tiruporur Kandaswami Temple| Mobile phone at Kandasawa

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தினேஷ். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் பணியாற்றுகிறார். மூன்று மாதங்களுக்கு முன் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு குடும்பத்துடன் தினேஷ் சென்றார். தரிசனம் செய்து விட்டு, உண்டியலில் காணிக்கை செலுத்தினார். அப்போது காணிக்கை பணத்துடன் அவர் கையில் வைத்திருந்த ஐபோனும் உண்டியலுக்குள் விழுந்தது. இதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் தினேஷ் கூறினார். ஆனால் அறநிலையத்துறை உத்தரவின்றி கோயில் உண்டியலை திறக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என நிர்வாகிகள் கூறினர். இதையடுத்து, உண்டியலில் மொபைல் தவறுதலாக விழுந்தது குறித்து அறநிலையத்துறைக்கு தினேஷ் கடிதம் எழுதினார். அதில் மாற்று மொபைல் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு, நேற்று உண்டியல் திறக்கப்பட்டது. ஏற்கனவே தினேஷ் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மாற்று மொபைல் போன் எண்ணுக்கு, கோயில் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மொபைல் போன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தினேஷ் கோயிலுக்கு வந்தார். உண்டியல் காணிக்கைகளை வெளியே எடுத்த போது, தினேஷின் மொபைல் போனும் கிடைத்தது.

டிச 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை