லாரிகள் சிறைபிடிப்பு: ரோட்டில் அமர்ந்த அதிமுக எம்எல்ஏ | Tiruppur Garbage Protest | ADMK Jayakumar |
திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சுற்றுவட்டார பாறைகுழிகளில் கொட்டப்படுகிறது. மக்கள் எதிர்ப்பை மீறி பல இடங்களில் ஊருக்கு அருகிலேயே பாறைகுழிகளில் குப்பை கொட்டிவிட்டு செல்கின்றனர். ஊத்துக்குளி அருகே உள்ள வெள்ளியம்பாளையம் பகுதியில் கைவிடப்பட்ட பாறை குழியில் குப்பை கொட்ட 10க்கும் மேற்பட்ட லாரிகள் வந்தன. பொதுமக்கள் அதனை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அதிமுக பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மக்களுடன் இணைந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் பாஜ நிர்வாகிகளும் இணைந்தனர். #TiruppurProtest #GarbageDumping #AIADMK #JayakumarMLA #BJPSupport #DMKCriticism #ThoppuVenkatachalam #Velliyampalayam #TamilNaduPolitics #WasteManagement