/ தினமலர் டிவி
/ பொது
/ நல்வாய்ப்பாக உயிர் தப்பிய தொழிலாளர்கள் | Tirupur | Fire | Police Investigation
நல்வாய்ப்பாக உயிர் தப்பிய தொழிலாளர்கள் | Tirupur | Fire | Police Investigation
திருப்பூர், எம்ஜிஆர் நகர் புளியம் தோட்டம் பகுதியில் தகர கொட்டைகள் அமைத்து வடமாநில மற்றும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இந்த சூழலில் இன்று மதியம் 3 மணி அளவில் ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்துள்ளது. தீப்பற்றி அருகருகே இருந்த வீடுகளுக்கும் மளமளவென பரவியது. தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து அப்பகுதி முழுதும் புகை மூட்டம் உருவாகியது. சுற்றுவட்டார பகுதி மக்கள் திரண்டனர். திருப்பூர் தெற்கு, வடக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து முதலில் மற்ற வீடுகளில் இருந்த சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். 2 மணி நேர போராட்ட முடிவில் தீ முழுதும் அணைக்கப்பட்டது.
ஜூலை 09, 2025