கொத்து கொத்தாக இறந்து கிடந்த வாயில்லா ஜீவன்கள்
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 12, 13வது வார்டுகளுக்கு உட்பட்ட ஜெயாநகர், காமாட்சி அவென்யூ, ஏஎஸ்பி நகர், செந்தில் நகர், பாரதி நகரில் கடந்த 3 வாரங்களில் 50க்கு மேற்பட்ட நாய்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தன. ரத்த வாந்தி எடுத்தபடி துடிதுடித்து அவை இறந்திருந்தன. நாய்களுக்கு யாரோ விஷம் கலந்த உணவை வைத்து கொன்றது தெரிந்தது. போலீசார் விசாரித்து வந்தனர்.
அக் 05, 2024