/ தினமலர் டிவி
/ பொது
/ சம்பவம் நடக்கும் போதே ஸ்பாட்டில் தூக்கும் போலீஸ்: CCTV காட்சி | Gummidipoondi | liquor shop
சம்பவம் நடக்கும் போதே ஸ்பாட்டில் தூக்கும் போலீஸ்: CCTV காட்சி | Gummidipoondi | liquor shop
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூரில் டாஸ்மாக் உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பதால் அடிக்கடி திருட்டு நடக்கிறது. ஞாயிறன்று இரவு டாஸ்மாக் ஊழியர் சிவக்குமார் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்றார். ஏற்கனவே அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் திருட்டு நடந்துள்ளதால் சந்தேகத்தில் பேரில் தற்செயலாக சிசிடிவி காட்சிகளை தனது செல்போனில் பார்த்துள்ளார். அப்போது தச்சூர் டாஸ்மாக் ஷட்டரை ஆசாமி ஒருவன் மெஷினால் வெட்டிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
செப் 29, 2025