உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வக்பு சட்டம் திருப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் | TN BJP | Wakf board bill | DMK Resolution | TN

வக்பு சட்டம் திருப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் | TN BJP | Wakf board bill | DMK Resolution | TN

மத்திய அரசு சமீபத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தது. அதாவது இஸ்லாமியர்களின் சொத்துகளை நிர்வகிக்கும் அமைப்பான வக்பு வாரியம் தொடர்பாக 1995ல் சில சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டன. அதில் இப்போது மேலும் சில திருத்தங்களை பாஜ அரசு மேற்கொள்கிறது. அதன்படி வக்பு வாரிய சொத்து தொடர்பான சர்ச்சையில் கலெக்டரே இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்குகிறது. ஒரு சொத்து வக்பு வாரியத்துக்கு சொந்தமா என்பது பற்றி கணக்கெடுக்கும் உரிமை புதிய சட்ட திருத்தம் மூலம் கலெக்டருக்கு வழங்கப்படும். மத்திய வக்பு கவுன்சில் அமைப்பில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர் 2 பேரும் உறுப்பினராக இந்த மசோதா வகை செய்கிறது. பாஜ அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அந்த வகையில் தமிழக சட்டசபையில் இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

மார் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி