/ தினமலர் டிவி
/ பொது
/ இன் அவுட் லிஸ்டில் இருந்தவர்கள் யார் ? | DMk | MKstalin | TN Cabinet | Cabinet Change
இன் அவுட் லிஸ்டில் இருந்தவர்கள் யார் ? | DMk | MKstalin | TN Cabinet | Cabinet Change
தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர் ஒருவர் உட்பட மூன்று பேர் மாற்றப்படுகின்றனர். அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கப்படுகின்றனர். சிலரது இலாகாக்கள் மாற்றப்படலாம் என நேற்று தகவல் பரவியது. யார் அந்த மூத்த அமைச்சர், புதிய அமைச்சர்கள் யார் என்ற கேள்விகளும், விவாதங்களும் அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பின. மூத்த பத்திரிகையாளர் ஒருவர் இது தொடர்பாக முதல்வரிடம் பேசி, அமைச்சரவையில் மாற்றம் இல்லை என்ற பதிலை சோசியல் மீடியாவில் பதிவு செய்தார். அதே நேரம் எனக்கு தகவல் வரவில்லை என முதல்வர் ஸ்டாலினும் பேட்டி ஒன்றில் கிண்டலாக பதில் அளித்தார்.
ஆக 23, 2024