/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக பாஜ மையக்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை! TN BJP | Nainar Nagendran | Annamalai | PMK | DMDK
தமிழக பாஜ மையக்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை! TN BJP | Nainar Nagendran | Annamalai | PMK | DMDK
அ.தி.மு.க, பா.ஜ கூட்டணியை பலப்படுத்த, பா.ம.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளை இணைக்க, தமிழக பா.ஜ மையக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க, பா.ஜ கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க பொதுச்செயலர் பழனிசாமி, மக்கள் சந்திப்பு வாயிலாக பிரசாரம் செய்து வருகிறார். பா.ஜ.வும் வெற்றி வாகை சூட, தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை துவக்கி உள்ளது. சென்னை கமலாலயத்தில், தமிழக பா.ஜ மையக்குழு கூட்டம் நேற்று நடந்தது. பா.ஜ அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தார்.
ஆக 11, 2025