உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தினால் இனி இப்படி செய்ய முடியாது | TNEB | Dinamalar

ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தினால் இனி இப்படி செய்ய முடியாது | TNEB | Dinamalar

வீடுகளில் மின்சார ரீடிங் எடுக்கப்பட்ட 20 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். தொழிற்சாலைகளுக்கு 7 நாள் அவகாசம் உண்டு. தெரு விளக்கு, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்வதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்த 60 நாட்களுக்கு அவகாசம் அளிக்கப்படுகிறது. அப்படி இருந்தும், உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியத்துக்கு 2,533 கோடி ரூபாய் கட்டணம் நிலுவை வைத்துள்ளன. இதில், அதிகபட்சமாக ஊராட்சிகள் 1725 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளன. இது தவிர, வருவாய், கல்வி, காவல் உள்ளிட்ட அரசு துறைகள், 93 கோடி ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளன. அரசு துறைகள், மின் கட்டணத்தை குறித்த தேதிக்குள் செலுத்துவதை உறுதி செய்ய, அனைத்து அலுவலகங்களிலும், பிரிபெய்டு வசதியுடன் கூடிய, ஸ்மார்ட் மீட்டரை அடுத்த மாதத்திற்குள் பொருத்துமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய மின் துறை உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ