பொங்கலே பொங்காமல் பொங்கல் விழா... பலே! TnGovt Pongal Celebration|
ென்னை தலைமை செயலக வளாகத்தில், அரசு சார்பில் நடந்த பொங்கல் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அரசு ஊழியர்களுடன் இணைந்து, பொங்கல் விழா கொண்டாடினார். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில், அலங்கார பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேடைக்கு முன்பாக, நான்கு பொங்கல் பானைகள் வைக்கப்பட்டிருந்தன. முதல்வர் வருவதற்கு முன்பு, நெருப்பு வைத்து, பானையை கரி படிய வைத்தனர். கேட்டரிங் நிறுவனத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சர்க்கரை பொங்கலை, நான்கு பானைகளிலும் நிரப்பினர். முதல்வர் வந்ததும், அவரும், துணை முதல்வரும், பானையில் இருந்த பொங்கலை, கரண்டியில் எடுத்து, அங்கிருந்தவர்களுக்கு வினியோகம் செய்தனர்.
ஜன 15, 2026