நெல்லையில் ஓடும் டப்பா பஸ்களின் பகீர் பின்னணி TNSTC | tnstc ktc depo | nellai bus viral video | tvl
ஓடுறதுல பாதி சொப்பன சுந்தரி பஸ் நெல்லை டிரைவர்கள் அலறுவது ஏன்? தள்ளு... தள்ளு... தள்ளே... இதான் வீடியோ ரகசியம் ‛நெல்லை சிட்டிக்குள்ள ஓடுற கவர்மென்ட் பஸ்ச ஓட்டனும்னா டிரைவிங் தெரிஞ்சா மட்டும் பத்தாது தம்பி; இந்த மாதிரி அலேக்கா பஸ்ச தள்ளவும் தெரிஞ்சிருக்கனும்னு தாங்க படுற கஷ்டத்த கூட நக்கலா சொன்னாரு டவுன் பஸ் டிரைவர் ஒருத்தர். விஷயம் என்னனா, கேடிசி நகர் டிப்போல இருந்து ஓடுற பாதி பஸ்ல பேட்டரி அவ்ளோ வீக்கு. இஞ்சினும் கோளாறு பிடிச்சது. காலைல வண்டிய ஸ்டாட் பண்ணிட்டா, அன்னைக்கு நைட் ஓடி முடியுற வேற இடையில இஞ்சின ஆப் பண்ணக்கூடாது. தெரிஞ்சோ தெரியாமலோ அறிஞ்சோ அறியாமலோ ஆப் பண்ணிட்டா அவ்ளோ தான் தம்பி. அப்புறம் இப்படி தான் நடுரோட்டுல வேகாத வெயில்ல இறங்கி பஸ்ச தள்ளியே ஆகனும். அதுமட்டும் இல்ல, தெனமும் காலையில பர்ஸ்ட் டைம் வண்டிய ஸ்டார்ட் பண்றதே பெரிய கலை. இதுக்குனே கையில பெரிய கேபிளோட சுத்துறோம். பேட்டரி நல்லா இருக்க பஸ்சுல கேபிள கனெக்ட் பண்ணி, அத வச்சி தான் பேட்டரி வீக்கான பஸ் இஞ்சின ஸ்டார்ட் பண்றோம். எத்தன மேடு பள்ளம், எத்தன நிறுத்தம் வந்தாலும் அதுக்கு அப்புறம் ஒருமுறை கூட வண்டிய நிப்பாட்டிட கூடாது. இது அவ்ளோ சாதாரண விஷயம் இல்ல. அனுபவசாலிங்களுக்கு தான் ஈசியா வரும். புதுசா வேலைக்கு சேர்ந்தவங்களால இவ்ளோ நேக்கா ஓட்ட முடியாது. அதனால தான் அடிக்கடி நெல்லை சிட்டில டவுன் பஸ்ச தள்ளிட்டு போறத பாக்க முடியுதுனு அந்த டிரைவர் விவரமா சொன்னாரு. பாளை பஸ் ஸ்டாண்ட், மெடிக்கல் காலேஜ் நடுவுல நேத்து டவுன் பஸ்ச 10 பேர் தள்ளிட்டு போனதுக்கும் இதே காரணம் தானாம். சரி அண்ணன், கவர்மென்ட் கிட்ட புது பேட்டரி கேட்டு வாங்க வேண்டியதானனு கேட்டா, ‛பேட்டரி எங்க தம்பி தர்றாங்க...னு வடிவேல் காமெடிய நியாபகப்படுத்திட்டு அடுத்த வண்டிய தள்ளி விட கிளம்பிட்டாரு...!