விஜய் செய்த அந்த விஷயம்... திமுக கையில் ஆதாரம் karur stampede | tvk vijay karur meeting | dmk vs tvk
கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகிகள் நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இன்னொரு பக்கம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் திமுகவின் சதி தான் இந்த கூட்ட நெரிசலுக்கும் மரணங்களுக்கும் காரணம் என்று தவெக குற்றம் சாட்டுகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரி ஐகோர்ட்டையும் நாடி இருக்கிறது. சிபிஐ விசாரணை கோரும் தவெக மீதும் அக்கட்சி தலைவர் விஜய் மீதும் திமுக பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளது. கரூர் கோர சம்பவத்துக்கு முழுக்க முழுக்க விஜய் தான் காரணம் என்று திமுக செய்தி தொடர்பாளரும் வக்கீலுமான சரவணன் கூறி உள்ளார்.