திருவள்ளூரை மிரட்டிய ரயில் தீ விபத்து: கலெக்டர் விளக்கம் | train accident | diesel tankers fire
தண்டவாளத்தில் இருந்த விரிசலே ரயில் தடம்புரள காரணம்? கலெக்டர் சொன்ன விஷயம் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சரக்கு ரயில் தடம் புரண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மாவட்ட ஆட்சியர் பேட்டி சென்னை மணலியில் இருந்து நேற்று அதிகாலை 52 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் ஒன்று அரக்கோணம் மார்க்கமாக சென்று கொண்டிருந்தது. சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே தடம் புரண்டது. 50 டேங்கர்களில் பெட்ரோல், டீசல் ஏற்றி சென்ற அந்த ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென 18 டேங்கர்கள் அடுத்தடுத்து தடம்புரண்டன. அப்போது டேங்கர்கள் ஒன்றோடு ஒன்று உரசி, தீ பிடித்தது. இந்த பயங்கர தீ விபத்தால் அந்த பகுதியில் மிகப்பெரிய அளவில் கரும்புகை சூழ்ந்தது. 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 8 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், 4 பெட்ரோல் டேங்கர்கள், 14 டீசல் டேங்கர்கள் என 18 டேங்கர்களும் தீக்கிரையாகின. திருவள்ளூர்- அரக்கோணம் மார்க்கத்தில், புறநகர் மின்சார ரயில், விரைவு ரயில் பாதைகள் என 4 ரயில் பாதைகளும் மேல்நிலை மின் கம்பங்கள், மின் கம்பிகள் சேதமடைந்தன. தண்டவாளங்கள் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், சீரமைக்கப்பட்ட 2 தண்டவாளங்களில் அதிகாலை முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் இன்று விளக்கம் அளித்தார்.