தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கவலை அளிக்கிறது: மகளிர் ஆணையம்
திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்த ஆந்திராவை சேர்ந்த 4 மாத கர்ப்பிணி, சொந்த ஊர் செல்ல ரயிலில் புறப்பட்டார். அவரை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று தாக்கியுள்ளனர். ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டனர். படுகாயமடைந்த கர்ப்பிணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ரயிலில் மகளிர் பெட்டியில் அந்த பெண் பயணித்தபோதும், ஒரு கும்பலால் தாக்கப்பட்டு இருக்கிறார். இது, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு பற்றிய கவலையை எழுப்பி உள்ளது. இந்த சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
பிப் 07, 2025