உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் | Train hit school van | Cuddalore

அலட்சியமாக செயல்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் | Train hit school van | Cuddalore

கடலூர் கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் இன்று காலை வழக்கம்போல் மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆலப்பாக்கம் வழியாக வந்துகொண்டிருந்தது. செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடந்தபோது கண் இமைக்கும் நேரத்தில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் வேன் 50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் சுக்கு நூறாக நொறுங்கியது. வேனுக்குள் இருந்த 4 மாணவர்கள், டிரைவர் என அனைவரும் படுகாயமடைந்த நிலையில் 12 வயது மாணவன் நிவாஸ் அதே இடத்தில் உடல் சிதறி இறந்தான். ரயில் மோதியதை பார்த்து அங்கிருந்த மக்கள் ஓடி சென்று உள்ளே இருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். முதலில் சென்ற 55 வயது அண்ணாதுரை மீது வேன் மோதியதில் சேதமடைந்த ரயில்வே மின் ஒயர் சட்டென அறுந்து விழுந்தது. இதில் ஷாக் அடித்து தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரையும் படுகாயமடைந்தார். 15 வயது செழியன், 16 வயது விஷ்வேஸ், 16 வயது சாருமதி ஆகிய 3 மாணவர்கள், 47 வயது வேன் டிரைவர் சங்கர் மற்றும் அண்ணாதுரை ஆகிய 5 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்

ஜூலை 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை