உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸின் 11 பெட்டிகள் தடம் புரண்டன! Bengaluru-Kamakhya Express derail| Odisha tra

சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸின் 11 பெட்டிகள் தடம் புரண்டன! Bengaluru-Kamakhya Express derail| Odisha tra

பெங்களூரில் இருந்து அசாமின் காமாக்யாவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் நெர்குண்டிNergundi ரயில் நிலையம் அருகே சென்றபோது, திடீரென ரயில் தடம் புரண்டது. 11 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இந்த விபத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒருவர் இறந்தார். படுகாயம் அடைந்த 8 பேர் உடனடியாக கட்டாக் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களை சேர்ந்தவர்கள். லேசான காயமடைந்த மேலும் சிலருக்கு விபத்து நடந்த இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ரயில் தடம் புரண்டதால், அந்த வழியாக செல்ல வேண்டிய மற்ற ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றி, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் பயணிகள் அவரவர் இடங்களுக்கு செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை