நகராட்சி பூங்காவில் தனி அறை: திமுக கவுன்சிலர் அத்துமீறல்
திருச்சி அடுத்த துறையூர் நகராட்சி 22வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வீரமணிகண்டன். நகராட்சி பூங்காவில், 300 சதுர அடியில் தனிக்கென தனி ரூம் கட்டியுள்ளார். ஓய்வு அறையாகவும், கட்சிக்காரர்களை சந்திக்கும் அலுவகலமாகவும் இதை பயன்படுத்தி வருகிறார். இது தவிர, கட்சிக்காரர்கள், நண்பர்களுடன் விளையாடி மகிழ, அங்கேயே 2,000 சதுர அடியில் உள்விளையாட்டு அரங்கும் கட்டியுள்ளார். அவரது ஓய்வு அறை கட்டடத்திற்கு நுாலகம் என பெயரிட்டு, மக்களை ஏமாற்றும் முயற்சியில் வீரமணிகண்டன் ஈடுபட்டார். இந்த சட்ட விரோத ஆக்கிரமிப்புக்கு நகராட்சி அதிகாரிகள் சிலரும் மறைமுக ஆதரவு என கூறப்படுகிறது. இது பற்றி நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது. உடனே அங்கு சென்ற நகராட்சி ஊழியர்கள், அந்த கட்டடத்திற்கு சீல் வைத்தனர். இதையறிந்த வீரமணிகண்டன், தன் ஆதரவாளர்களை பூங்காவுக்கு அனுப்பி, நகராட்சி ஊழியர்களை சிறைபிடித்தார். அங்கு வந்த போலீசார், வீரமணிகண்டனுக்கு ஆதரவாக செயல்பட்டு, கட்டடத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற செய்தனர். ஏற்கனவே, நகராட்சி அதிகாரிகளின் ஆதரவுடன் தான் வீரமணிகண்டன் பூங்காவை ஆக்கிரமித்ததாக கூறப்படும் நிலையில், தற்போது போலீசாரும் திமுக கவுன்சிலரின் ஆக்கரிமிப்புக்கு துணை போனது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. #Dmk_councillor #Municipality_park #corporation #thuriyur #Trichy #indoor_club #Govt_officials #TNgovt #Publicpark #dmk_encroachment #TVK #CM_vijay #Police_support_dmk #TNpolitics #Politicalnews #Tamiladu #Tamilnews #Currentaffairs #Breakingnews