நடுரன்வேயில் பயணிகளை பதறவைத்த திருச்சி-ஷார்ஜா விமானம் trichy-sharjah air india express flight issue
திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் நேரடி விமானம் இயக்கப்படுகிறது. வழக்கமாக அதிகாலை 4:25 மணிக்கு இந்த விமானம் புறப்படும். பகல் 1:50 மணிக்கு சார்ஜாவை சென்றடையும். இன்று அதிகாலை 4:25 மணிக்கு பதில் 5:40 மணிக்கு புறப்படும் என்று விமான நிறுவனம் அறிவித்து இருந்தது. சொன்னது போல் 5:45 மணிக்கு விமானம் புறப்பட ஆரம்பித்தது. உள்ளே 176 பயணிகள் இருந்தனர். ரன்வேயில் ஏறி டேக் ஆப் ஆக முயன்ற போது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் ஓட முடியாமல் நடு ரன்வேயில் நின்றது. பயணிகள் பீதியில் உறைந்தனர். விமானத்தால் தொடர்ந்து டேக் ஆப் ஆக முடியாது என்று தெரிந்தது. ரன்வேயிலேயே விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. 2 மணி நேரம் பயணிகளை இறங்க அனுமதிக்கவில்லை. பின்னர் 12 மணிக்கு வேறு விமானம் வரும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்தது. அதன் பிறகே பயணிகள் காத்திருப்போர் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். டேக் ஆப் ஆகும் முன்பே தொழில்நுட்ப கோளாறு தெரிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் என்ன நடந்தது என்பதை உள்ளே இருந்த மணப்பாறையை சேர்ந்த சர்தார் பாட்ஷா மற்றும் பயணிகள் விவரித்தனர். #TrichyToSharjah #AirIndiaExpress #TakeoffIssue #TrichyAirport #SharjahFlight #FlightDelay #AirlineSafety #AirportProtocol #TravelUpdate #PassengerExperience #FlightProblems #AirlineNews #AirTravel #AviationIssues #FlightDeparture #TravelerAlert #Flighthome #FlightOperations #FlightStatus #AviationSafety