புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இடையே துணிகர சம்பவம் | Trichy theft | New year night
தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சண்முகம். திருச்சி, கருமண்டபம் அருகே பொன் நகர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு, ஒரத்தநாட்டில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். துக்கம் விசாரிக்க சண்முகம் குடும்பத்துடன் அங்கு சென்று இருந்தார். வீட்டில் காவலாளி பணியில் இருந்தார். நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி இருந்த நேரத்தில், கொள்ளை கும்பல் வீட்டுக்குள் நுழைய முயன்றது. காவலாளி தடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவரை கட்டிப்போட்டு அந்த கும்பல் வீட்டுக்குள் நுழைந்தது. பீரோவை உடைத்து அதில் இருந்த 40 லட்சம் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். காலையில் வீட்டுக்கு வந்த சண்முகத்தின் மனைவி, காவலாளி கட்டிப்போட்டு மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தண்ணீர் தெளித்து எழுப்பினார். நள்ளிரவில் நடந்த சம்பவத்தை காவலாளி விவரித்தார்.