ஈரான் தலைவர் நன்றியற்றவர்: டிரம்ப் உடைத்த ரகசியம் | Trump | Sayyid Ali Hosseini Khamenei
ஸ்ரேல்-ஈரான் இடையே 12 நாட்களாக நடந்த போர், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டதை தொடர்ந்து ஜூன் 24ம் தேதி முடிவுக்கு வந்தது. இருந்தாலும் போர் ஒப்பந்த விதிகளை மீறி இரு நாடுகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. தனது பேச்சை கேட்காமல் செயல்படுவது குறித்து டிரம்ப் வருத்தம் தெரிவித்தார். இந்த சூழலில் அமெரிக்காவின் முகத்தில் அறைந்தோம் என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பேசியது டிரம்ப்பை இன்னும் சூடாக்கியது. ராணுவ இடங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும், அந்நாட்டின் பல முனை பாதுகாப்பையும் ஈரான் ராணுவப்படைகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளன. அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் அந்நாடு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இதனால், டிரம்ப் நடிக்க வேண்டியிருந்தது. எதிர்காலத்தில் ஈரானுக்கு எதிராக நடக்கும் எந்த அத்துமீறலுக்கும், பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அமெரிக்க தளத்தை தாக்கியது பெரிய விஷயம். எதிர்காலத்தில் அத்துமீறல்கள் தொடர்ந்தால், அதன் மீதான தாக்குதல் தொடரும். நமது எதிரிகள், ஏவுகணைகள் அல்லது அணுசக்தி திட்டங்கள் என தாக்குதலுக்கு காரணம் கூறினர்.