உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இஸ்ரேலுக்கு டிரம்ப் END CARD-பரபர ரிப்போர்ட் Israel vs Hezbollah | Hamas | Trump ceasefire proposal

இஸ்ரேலுக்கு டிரம்ப் END CARD-பரபர ரிப்போர்ட் Israel vs Hezbollah | Hamas | Trump ceasefire proposal

காசாவில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் பயங்கரவாதிகளுடன் 13 மாதங்கள் முன்பு இஸ்ரேல் போரை துவங்கியது. லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற இன்னொரு பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புலா, ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கியது. ஒரு ஆண்டாக வடக்கு இஸ்ரேலில் சரமாரியாக குண்டு வீசி வந்தது. இதனால் எல்லையில் வசித்த இஸ்ரேலியர்கள் வீடுகளை காலி செய்து விட்டு மத்திய இஸ்ரேலை நோக்கி இடம்பெயர்ந்தனர். இதை எதிர்கொள்ள 2 மாதம் முன்பு ஹெஸ்புலாவுக்கு எதிராகவும் லெபனானில் இஸ்ரேல் போரை துவங்கியது. இப்போது ஹமாஸ், ஹெஸ்புலாவுடன் தீவிர போர் நடக்கிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து விட்டனர். தெற்கு லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து பல ஆயிரம் பேர் இடம் பெயர்ந்து விட்டனர். 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரு போராலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சில நாடுகள் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சை துவங்கின. ஆனால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இப்போது ஒரே நேரத்தில் காசா மற்றும் லெபனானில் நடக்கும் இரு போர்களும் முடிவுக்கு வரும் சூழல் கனிந்து இருக்கிறது. இதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டிரம்ப் தீவிரமாக களம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல்-ஹெஸ்புலா போர் நிறுத்தம் தொடர்பான ஒரு வரைவு அறிக்கையை அமெரிக்கா தயார் செய்தது. அதில் டொனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ