எதிர்ப்பாளர்கள் கோஷம்: கூலாக அட்வைஸ் செய்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை என்ற கோஷத்துடன் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்குத்தான் என்பதை முன்னிறுத்தி அவர் செயல்படுவதற்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழ்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிபர் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அதிகளவில் வரிகளை விதித்து (tariffs) அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு அவர் ஆதரவளித்து வருகிறார். காசா விவகாரத்தில் டிரம்ப்பின் நிலைப்பாட்டுக்கு வெளிநாடுகள் மட்டுமின்றி உள்நாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று இரவு துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (J.D. Vance), வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio), ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) ஆகியோருடன் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு உணவு உண்ண சென்றார், அதிபர் டிரம்ப். டிரம்பை பார்த்ததும், ஹோட்டலில் உணவு அருந்திக் கொண்டிருந்த சிலர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். “இன்றைய ஹிட்லர் ட்ரம்ப் எனவும், பாலஸ்தீனத்துக்கு விடுதலை கொடு வாஷிங்டனுக்கு விடுதலை கொடு எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதை பார்த்து, அங்கிருந்த மற்றவர்களும் டிரம்புக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர். இதை டிரம்ப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வாஷிங்டன் நகரம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. நீங்கள் வீட்டுக்குச் செல்லும்போது பயமின்றி செல்லலாம். மகிழ்ச்சியாக இருங்கள். ஆனால் குறைவாக குடியுங்கள்,” என கோஷமிட்டவர்களை பார்த்து டிரம்ப் கூறினார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, கோஷமெழுப்பிய நபர்கள் டிரம்பின் பாதுகாவலர்களால் ஓட்டலை விட்டு வெளியேற்றப்பட்டனர். Trump # Modern time Hitler # Washington dc #