உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / US-ல் இறங்கியதும் இப்படியா! புடின் ரியாக்ஷன் | trump putin meeting | putin reaction in US | ukraine

US-ல் இறங்கியதும் இப்படியா! புடின் ரியாக்ஷன் | trump putin meeting | putin reaction in US | ukraine

உக்ரைனில் போர் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்தார். அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் இந்த சந்திப்பு நடந்தது. விமானத்தில் வந்திறங்கிய புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. புடினை கைகுலுக்கி புன்னகையுடன் வரவேற்றார் டிரம்ப். இரு தலைவர்களும் ரன்வே பகுதியில் இருந்து வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது செய்தியாளர்கள் பக்கம் இருந்து சில ரிப்போர்ட்டர்கள், உக்ரைனுக்கு ஆதரவாக புடினை நோக்கி கேள்வி கணைகளை பறக்க விட்டார். ‛அதிபர் புடின், அப்பாவி மக்களை கொல்வதை நீங்கள் நிறுத்துவீர்களா?, ‛அதிபர் புடின், போரை நிறுத்த நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா என்று பெண் ரிப்போர்ட்டர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது, நீங்கள் சொல்வது எனக்கு கேட்கவில்லை என்பது போல் புடின் கொடுத்த ரியாக்ஷன் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆக 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ