போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்புடன் பேச புடின் விருப்பம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் பேரை அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், எதிர்த்து வருகிறார். இந்த போர் அபத்தமானது; தாக்குதலை ரஷ்ய உடனடியாக நிறுத்தி கொள்ளாவிட்டால் கடுமையான பொருளாார தடைகள் விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்து இருந்தார். போரை எளிதாகவும் நிறுத்தலாம்; கடினமாகவும் செய்யலாம். எளிமையாக நிறுத்துவதே சரியானது என டிரம்ப் கூறியிருந்தார். இச்சூழலில், டிவிக்கு பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புடின், 2020 அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று இருந்தால், 2022ல் உக்ரைனுடன் போர் ஏற்பட்டு இருக்காது எனக்கூறினார். டிரம்ப் புத்தசாலி நபர் மட்டுமல்ல, ஒரு நடைமுறை சார்ந்த நபரும் கூட. உக்ரைன் மீதான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க உதவியுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என புடின் கூறியுள்ளார்.